palanisamy irrelevant answer to journalist question in theni fire issue
சென்னை தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 36 பேர், 7 முதல் 8 குழுக்களாக பிரிந்து தேனி மாவட்டம் கொழுக்குமலை-குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கு வழிகாட்ட 4 பேர் சென்றுள்ளனர். அந்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் 40 பேரும் சிக்கினர். இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூறினார். இதையெல்லாம் கூறிவிட்டு இறுதியில் கேள்விக்கு பதிலளிப்பார் என நினைத்தால், கடைசி வரை அதற்கு பதிலளிக்கவே இல்லை.
நிதியுதவி அளிக்கப்படுமா? என்பதுதான் கேள்வி. ஆனால் கடைசிவரை அதற்கு முதல்வர் பதிலளிக்கவே இல்லை. தான் வைத்திருந்த டெம்பிளேட்டை மட்டும் படித்துவிட்டு நிறுத்திவிட்டார். மீண்டும் ஒருமுறை அதே கேள்வி திரும்ப கேட்கப்பட்டதும், பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஏதேனும் ஒரு விவகாரம் என்றால், அதுதொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கும் ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும் கேள்விகளுக்கு நேரடி பதில் அளிக்காமல், தாங்கள் வைத்திருக்கும் டெம்பிளேட்டு வாக்கியங்களை படித்துவிட்டு அதன்பிறகு பதிலளிப்பது வழக்கம்.
ஆனால் முதல்வர் பழனிசாமியோ, டெம்பிளேட்டுகளை படித்து முடிப்பதற்குள், கேட்கப்பட்ட கேள்வியையே மறந்துவிட்டார். அதனால் இறுதிவரை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அந்த கேள்வியை மீண்டும் கேட்டதும் பதிலளித்தார்.
எந்த கேள்வி கேட்டாலும் அதுதொடர்பான டெம்பிளேட்டுகளை படிக்கும் வழக்கத்தை மாற்றி கேள்விக்கு நேரடி பதிலளித்துவிட்டால், அனைவருக்கும் நேரம் மிச்சம்..
