Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க.வில் இணைந்த எடப்பாடியார் தம்பி!: அப்ப ஜெயலலிதா துக்கநாள் ஊர்வலத்தில் இ.பி.எஸ். கண் கலங்கியது இதற்குதானா?

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர்! என்று அக்கட்சியினராலேயே அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதையொட்டி சென்னையில் அ.தி.மு.க. சார்பாக அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். 

palanisamy brother joins dmk
Author
Tamil Nadu, First Published Dec 5, 2019, 5:50 PM IST

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர்! என்று அக்கட்சியினராலேயே அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதையொட்டி சென்னையில் அ.தி.மு.க. சார்பாக அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த அஞ்சலி ஊர்வலத்தில் சில முக்கியஸ்தர்கள் கருப்பு நிற சட்டையில் வரவில்லை, பெண் அமைச்சர்கள் வழக்கம்போல் டாம்பீகமாக வந்திருந்தனர், முக்கிய நிர்வாகிகள் சிரித்து பேசியபடி வந்தனர், அம்மாவின் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை, நன்றி இல்லை! என்று தொண்டர்களின் புலம்பல்கள் நிறைய. 

palanisamy brother joins dmk
ஆனால் அதையெல்லாம் மீறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது, முதல்வர் எடப்பாடியாரின் இறுகிய, கவலை படர்ந்த முகம் தான். ஊர்வலத்தில் நடந்து வருகையில் அவரது கண்கள் கலங்கியும் இருந்ததாக மாநில நிர்வாகிகளாலேயே பேசப்பட்டது. சில அமைச்சர்கள் கூட முதல்வரின் கவலை முகத்தை சுட்டிக் காட்டி தங்களுக்குள் கிசுகிசுத்தனர். 
’அம்மாவின் இறப்பு துயரிலிருந்து எடப்பாடியாரால் இன்னமும் வெளியேற முடியவில்லை. அவரது கண்களே கலங்கிவிட்டது பாருங்க. என்னதான் இன்று முதல்வரா இருந்தாலும், அவரு அம்மாவின் எளிய தொண்டன் தான் என்றும் அப்படின்னு நிரூபிச்சுட்டாரே!’ என்று தொண்டர்களும் உருகினர். இந்த நிலையில்தான் எல்லோருடைய மொபைல் வாட்ஸ் அப்புக்கும் வந்த அந்த போட்டோவும், செய்தியும் அ.தி.மு.க.வினரை அலற வைத்தது. 

palanisamy brother joins dmk
அதாவது எடப்பாடியாரின் தம்பி, அறிவாலயம் சென்று, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்! என்பது. எடப்பாடியாரின் சொந்த தம்பி இல்லை. பெரியம்மா மகனாம். அவரது பெயர் விஸ்வநாதன். அசப்பில் எடப்பாடியார் போலவே முக சாயலுடன் இருக்கிறார். முதல்வரின் தம்பி தங்கள் இயக்கத்தில் இணைவதை, பெரும் மகிழ்வுடன் வரவேற்று, அவரை அரவணைத்திருக்கிறார் ஸ்டாலினும். ஆனால் அதேவேளையில் விஸ்வநாதனின் இந்த செயலை ‘காட்டிக் கொடுத்த எட்டப்பன் செயல்’ என்று அ.தி.மு.க.வில் சிலர் வர்ணித்துள்ளனர். ஆனால் விஸ்வநாதனின் உறவினர்களோ ‘இந்த மாநிலத்துக்கே முதல்வராயிட்டார் பழனிசாமி. ஆனால் ரத்த சொந்தமான விஸ்வநாதனுக்கெல்லாம் எந்த நல்லதும் பண்ணல. ஆனால் யார் யாரையெல்லாமோ வளர்த்து விடுறார். அவரோட பெயரை வெச்சு யாரெல்லாமோ கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. ஆனால் உண்மையான பாசம், விஸ்வாசம் காட்டிய விஸ்வநாதனை அவர் கண்டுக்கல. அதான் இந்த பதிலடி.’ என்கின்றனர். 

palanisamy brother joins dmk
ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் தலைமை புள்ளியுமான எடப்பாடியாரின் தம்பியையே தி.மு.க.வுக்கு இழுத்து அதிரடி அந்த பண்ணிட்டார் ஸ்டாலின்! என்கிறார்கள். இப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாய்ந்து கேட்கும் கேள்வி, ‘ஓ! தம்பி தடம் மாறுனது முதல்வருக்கு தெரிஞ்சு  போச்சு. அதனாலதான் அம்மாவின் அஞ்சலி ஊர்வலத்தில் இப்படி வருத்த முகம் காட்டினாரோ?’ என்பதுதான். 
அரசியல் டா

Follow Us:
Download App:
  • android
  • ios