பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாசார துறை அமைச்சராக  இருபந்தவர் பையாசூல் ஹசன்சோகன்.  இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் , இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை என தரக்குறைவாக பேசினார்.

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை. இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது என தெரிவித்திருந்தார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அமைச்சர்  இப்படி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய பஞ்சாம் மாநில முதலமைச்சருக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பையாசூல் ஹசன் சோகன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஹசன் சோகனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்த நிலையில், அவரை பதவி விலகுமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சர்  உஸ்மான் பஸ்தர் வலியுறுத்தினார். இதையடுத்து, ஹசன் சோகன் தனது ராஜினாமா கடிதத்தை  முதலமைச்சரிடம் அளித்தார்.