பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக நிதி சேகரித்து பயிற்சி முகாம்கள், ஏவுதளங்களை மீண்டும் கட்டமைக்கின்றன. ஜெய்-இ-முகமது அமைப்பின் இந்த உயர் தொழில்நுட்ப வடிவம் இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. 

பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மாபெரும் சதி அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாத அமைப்புகளை உயர் தொழில்நுட்ப ஆயுதங்களால் சித்தப்படுத்த ஐஎஸ்ஐ சதி செய்து வருகிறது. உளவுத்துறை தகவல்படி ஜெய்ஷ்-இ-முகமது இப்போது நவீன ஆயுதங்களை பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக ஆபத்தானதாக மாறி வருகிறது. பழைய ஆயுதங்களை விட்டுவிட்டு, ஜெய்ஷ் குவாட்காப்டர்கள், ட்ரோன்களை வாங்க தயாராகி வருகிறது.

இதற்கு, பாகிஸ்தானிடம் இருந்து நிதியுதவி பெறுகிறது. பாகிஸ்தான் இராணுவமே ஜெய்ஷ் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் தனது நிதியில் 50 சதவீதத்தை ஆயுதங்களை வாங்க செலவிடுகிறது. இப்போது ட்ரோன்கள், குவாட்காப்டர்களை வாங்கும் திட்டத்தையும் தொடங்கி உள்ளது.

ஐஎஸ்ஐ உதவியுடன், ஜெய்ஷ் -இ-முகமது இயக்கம் கள்ளச் சந்தையில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், மோர்டார்களை வாங்குகிறது. இது பாகிஸ்தானின் மிகப் பெரிய சதி. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முயற்சிக்கிறது. ஜெய்ஷ் -இ-முகமது, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) இடையேயான உறவு மிகவும் ஆழமானது. பாகிஸ்தான் ராணுவம் ஜெய்ஷ்-இ-முகமது பாலூட்டி வளர்க்கிறது.

இந்த தீவிரவாத அமைப்புகள் ட்ரோன்களைப் பயன்படுத்தாமல் இல்லை. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) இதற்கு முன்பும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனாலும், அவர்களிடம் தற்போது மிகக் குறைவான நவீன ஆயுதங்களே உள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு இப்போது டிஜிட்டல் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது. எனவே விரைவில் அதன் ஆயுதக் கிடங்கிலும் ஆபத்தான நவீன ஆயுதங்கள் இருக்கும். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஆண்டுதோறும் 800-900 மில்லியன் பாகிஸ்தான் பணம் கிடைக்கிறது. இதில் பெரும் பகுதி வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது.

நிதிப் பணம், ஆயுதங்களை வாங்கவும், வலையமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பின்னடைவுகளைச் சந்தித்ததால் மசூத் அசார் கோபமடைந்து, இந்தியா மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தக்கூடும். ட்ரோன்கள் கிடைத்தால் அச்சுறுத்தல் பல மடங்கு அதிகரிக்கும் என்று பாதுகாப்பு நிறுவனங்கள் அஞ்சுகின்றன. ஆயுதங்களைக் கடத்துவதும், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதும் எளிதாக இருக்கும். பாகிஸ்தானில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அழிக்கப்பட்ட தலைமையகம் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக நிதி சேகரித்து பயிற்சி முகாம்கள், ஏவுதளங்களை மீண்டும் கட்டமைக்கின்றன. ஜெய்-இ-முகமது அமைப்பின் இந்த உயர் தொழில்நுட்ப வடிவம் இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.