Asianet News TamilAsianet News Tamil

பிராமணப்பெண்ணை காதலித்து நடத்தையில் சந்தேகம்... பீர் பாட்டிலோடு மோடியை வம்பிற்கிழுத்த இயக்குநர் பா.ரஞ்சித்..!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி உள்ள மோடி அண்ட் எ பீர் குறும்படம் மோடி அரசியலையும், இட ஒதுக்கீட்டையும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 

Pa.ranjit to boycott Modi with beer bottle
Author
Tamil Nadu, First Published Jun 6, 2020, 12:03 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி உள்ள மோடி அண்ட் எ பீர் குறும்படம் மோடி அரசியலையும், இட ஒதுக்கீட்டையும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பா.ரஞ்சித் தொடர்ச்சியாக பேசி வரும் அரசியல் எதிர்ப்பு அரசியலின் நீட்சியாகவே மோடி அண்ட் எ பீர் குறும்படமும் பார்க்கப்படுகிறது. தந்தை பெரியாரின் பெண்ணியக் கோட்பாட்டுடன் தொடங்கும் இந்தக் குறும்படத்தில் பெண் விடுதலை பற்றி பேசினாலும் பெண்ணியத்தை சந்தேகப்படும் காட்சிகள் நெருடலாக இருக்கின்றன. வசனங்களில் அரசியல் பேசும் இந்தப்படத்தில், மோடியின் ஆட்சி, அவரது ஆதரவாளர்களையும் வம்பிற்கிழுத்துள்ளனர். Pa.ranjit to boycott Modi with beer bottle

பிராமணர்களை பற்றி ஹீரோ பேசும் விமர்சனங்கள் சர்ச்சையாக அமைந்துள்ளன. எஸ்.வி.சேகர் உள்ளிட்ட மோடி ஆதரவாளர்களையும் கலாய்த்துள்ளனர்.  நாயகிக்கு காவி வர்ணத்தில் உடையை வடிவமைத்து அவர் சார்ந்திருக்கும் அரசியல் காட்சிப்படுத்தப்படுகிறது. அதேபோல் நாயகனுக்கு கருப்பு வண்ண உடை. 

படத்தின் இயக்குநர் தீன சந்திர மோகன் சர்ச்சையான கருத்துக்களை கொண்டு இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். அதாவது பிராமணப்பெண்ணுக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும் காதல். அந்த இளைஞன் மோடியை விமர்சித்து அந்தப்பெண்ணின் காதலை சந்தேகம் கொள்கிறான். இட ஒதுக்கீடு குறித்து கேட்கிறான். மாட்டிறைச்சி பற்றி கேள்வி எழுப்புகிறான். மேல்சாதி கீழ்சாதி வர்க்கம் பேசுகிறான். கடைசியில் அந்த்பெண்ணை வேறொருவருடன் சேர்த்து வைத்து சந்தேகம் கொள்கிறான். இந்த காட்சிகள் அனைத்தும் பீர் குடித்துக் கொண்டே நாயகன் பேசுவதாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 23 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios