Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: உளவுத்துறை என்ன செஞ்சது..? சீன விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரத்தின் 10 கேள்விகள்!

3. இந்திய விண்வெளிக்கலங்கள் பூமியை நாள்தோறும் சுற்றி வானிலிருந்து படங்களைத் தொடர்ந்து அனுப்புகின்றனவே, அந்தப் படங்கள் சீன ஊடுருவலைக் காட்டவில்லையா?
4. மே மாதம் 5ம் தேதி சீன ஊடுருவலை இந்திய ராணுவம் எப்படிக் கண்டுபிடித்தது?
5. மே மாதம் 5ம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் ஜீயைத் தொடர்பு கொண்டீர்களா?
 

P.Chidambaram slam Pm Modi and raised 10 questions
Author
Chennai, First Published Jun 19, 2020, 8:47 PM IST

வூஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்போது உணர்கிறீர்களா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

P.Chidambaram slam Pm Modi and raised 10 questions
இந்தியாவின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீன படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தியா - சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த  தலைவர் ப.சிதம்பரம், பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். இன்று சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய நிலையில், இந்தக் கேள்விகளுக்கு அரசியல் தலைவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். ட்விட்டரில் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகள்:P.Chidambaram slam Pm Modi and raised 10 questions
1. சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஏப்ரல் மாதத்தில் ஊடுருவியபோது அதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
2. இந்நிய எல்லையிலும் இந்திய நிலப்பரப்பிலும் சீனா கட்டுமானப் பணிகளைச் செய்ததையும் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
3. இந்திய விண்வெளிக்கலங்கள் பூமியை நாள்தோறும் சுற்றி வானிலிருந்து படங்களைத் தொடர்ந்து அனுப்புகின்றனவே, அந்தப் படங்கள் சீன ஊடுருவலைக் காட்டவில்லையா?
4. மே மாதம் 5ம் தேதி சீன ஊடுருவலை இந்திய ராணுவம் எப்படிக் கண்டுபிடித்தது?

P.Chidambaram slam Pm Modi and raised 10 questions
5. மே மாதம் 5ம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் ஜீயைத் தொடர்பு கொண்டீர்களா?
6. சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?
7. ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?
8. இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகுதான் தங்கள் மௌனம் கலைந்தது. இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?P.Chidambaram slam Pm Modi and raised 10 questions
9. “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
10. வூஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்போது உணர்கிறீர்களா?” என்று ப.சிதம்பரம் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios