வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு.! பாஜக அரசை கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என ப.சிதம்பரம் பாஜக அரசை கேலி செய்துள்ளார். 

P Chidambaram has criticized the BJP government for reducing the price of cooking gas due to the upcoming parliamentary elections Kak

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 முதல் 8 மாதங்களே உள்ளதால் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக களத்தில் பணியை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து இண்டியா என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பாஜக ஆட்சியில் பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளில் விலையானது உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவு ஏற்படும் என கருத்துகள் வெளியாயின.

P Chidambaram has criticized the BJP government for reducing the price of cooking gas due to the upcoming parliamentary elections Kak

சிலிண்டர் விலை திடீர் குறைப்பு

இந்தநிலையில் மத்திய அரசு அதிரடியாக சமையல் சிலிண்டருக்கு 200 ரூபாயை குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் சிலிண்டர் வாங்கும் 10 கோடி மக்களுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் இந்த விலை குறைப்பை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் அச்சத்தால் விலை குறைக்கப்பட்டதாகவும் கூறியது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

 

விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?  சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு! என பாஜக அரசை கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

கொடநாடு என்றாலே பழனிசாமிக்கு ‘கொல நடுக்கம்’ ஏற்படுவது ஏன்.? அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும்-முரசொலி

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios