அவர் வெங்காயம் சாப்பிடாமல் வெண்ணெய்யையா  சாப்பிடுகிறார் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப .சிதம்பரம்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடியுள்ளார்.   ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ஜாமினில்  விடுதலையாகி உள்ள ப.சிதம்பரம்  இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் .  அப்போது பேசிய அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் குறித்து தெரிவித்த கருத்துக்கு இவ்வாறு பதிலடி கொடுத்தார்.  

அதாவது இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர்,   இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்,  மக்கள் மோடி அரசை பார்த்து அஞ்சுகிறார்கள்,  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை இந்த அரசுக்கு பொருளாதார திறமை கொஞ்சம்கூட இல்லை என்பதையே இது காட்டுகிறது.  தற்போது ஏற்பட்டுள்ள  பொருளாதார பிரச்சனைக்கு  காரணம்  என்ன என்பதைக் கூட இன்னும் இந்த அரசால் யூகிக்க கூட முடியவில்லை என்றார். 

நான் சிறையில் இருந்த  வெளியே வந்ததும்,  காஷ்மீர் மக்களின் நிலையை குறித்த தான்  நினைத்துப் பார்த்தேன்,  அவர்களுக்கு  சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது , நாம் அனைவருக்கும்  சுதந்திரம் தேவை ,  நாம் அதற்காக போராட வேண்டும் .  நான் இப்போதுதான் வலிமையாக உணர்கிறேன் .  தற்போதுள்ள பொருளாதார சீர்குலைவை சரி செய்ய முடியும்,  ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு  அதை செய்யவும் தெரியாது,  நாங்கள் ஆலோசனை கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.  தற்போது நாட்டு மக்கள் மட்டுமல்ல எல்லா துறையும் இந்த அரசை பார்த்து அஞ்சி நடுங்குகிறது .  

ஜெஎன்யூ விவகாரத்தில்  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சரியே,  அதில் மாணவர்கள் எடுத்த  நிலைப்பாடு சரியானது.  உடனே அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்  என்றார். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காய விலை உயர்வு குறித்து தெரிவித்த கருத்து குறித்து  பதிலளித்த  சிதம்பரம் நிர்மலா சீதாராமன் வெங்காயத்தை சாப்பிடாமல் வெண்ணையை சாப்பிடுகிறார் என்ன காட்டமாக கேள்வி எழுப்பினார். 

அதாவது வெங்காயம் விலை குறித்து புதன் கிழமை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது அதில் பேசிய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், '' நான் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளவதில்லை,   அதைப் பயன்படுத்தாத குடும்பத்தைச் சேர்ந்தவர் நான்,   நான் வெங்காயம் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை வெங்காயத்துடன் அதிகம் சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன் '' என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.