Asianet News TamilAsianet News Tamil

ஏழைகளுக்கு ஒரு பயனும் இல்லாத நிதியமைச்சரின் பூஜ்ய அறிவிப்புகள்... பட்டியலிட்டு ப.சிதம்பரம் பொளேர்!

நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை. இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம் பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ 3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம். வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
 

P.Chidambaram attacked Bjp government on 20 lakh cr scheme
Author
Delhi, First Published May 16, 2020, 8:47 PM IST

ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம் என்று மத்திய அரசின் 20 லட்சம் கோடி தொகுப்பு திட்டத்தை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். P.Chidambaram attacked Bjp government on 20 lakh cr scheme
கொரோனா ஊரடங்கு அமலானது முதலே ஏழை, எளிய மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறிவருகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஏழை, எளிய மக்கள் கஷ்டத்திலிருந்து மீள அவர்களுடைய கையில் பணம் வழங்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்திவருகிறார். கொரோனா மீட்புத்திட்டமாக 20 லட்சம் கோடிக்கு திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு, அதை ஆவலாக எதிர்பார்ப்பதாகவும் ப.சிதம்பரம் ட் தெரிவித்திருந்தார்.

P.Chidambaram attacked Bjp government on 20 lakh cr scheme
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி தொகுப்பிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறார். அதில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து ட்விட்டர் பதிவு மூலம் குறைகூறிவருகிறார் ப.சிதம்பரம். இந்நிலையில் நிர்மலா சீத்தாராமனின் அறிவிப்பு பற்றி இன்றும் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் குறைப்பட்டுள்ளார்.P.Chidambaram attacked Bjp government on 20 lakh cr scheme
அவருடைய பதிவில், “ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம். மேற்குறிப்பிட்டவர்களுக்கு நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை. இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம் பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ 3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம். வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios