மக்கள் கூடியது சினிமா நட்சத்திரத்தை பார்க்க இல்லை எனவும் ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை செய்வதே எங்கள் கொள்கை எனவும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடையில் தமது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மக்கள் நீதி இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 

பின்னர் தனது அரசியல் கொள்கைகளை அறிவித்தார். அதில், தரமான கல்வியை தருவதே எனது முதல் கொள்கை எனவும் என்னுடன் முடியும்கட்சி அல்ல எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இனி என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகவே எனவும் தமது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவாகிவிட்டது எனவும் குறிப்பிட்டார். 

குறைந்தது மூன்று, நான்கு தலைமுறைக்கு நீடிக்க வேண்டிய கட்சி  இது எனவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது எனவும் நாம் சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் கமல் தனது கொள்கை தெளிவாக குறிப்பிடவில்லை என விமரசனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கு வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கமல். 

அப்போது, மக்கள் கூடியது சினிமா நட்சத்திரத்தை பார்க்க இல்லை எனவும் ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை செய்வதே எங்கள் கொள்கை எனவும் தெரிவித்தார். 

இடதா வலதா என்றால் நான் மய்யத்தில் இருக்கிறேன் எனவும் திராவிடத்தையும் இழக்கவில்லை. தேசியத்தையும் இழக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.