ஐந்து வருடம் மந்திரியாக இருந்து நக்கிவிட்டு, இப்போது எங்களை எல்லாம் சங்கி என்று சொல்கிறார்கள் என திமுக மீது ஆத்திரமாக பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

இதுகுறித்து அவர், ‘’ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள கட்சி அதிமுக. அதனால்தான் எங்கள் ஆட்சியில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால், நீங்கள் இஸ்லாமிய தூண்டி விடுகிறீர்கள். கிறிஸ்தவர்களை தூண்டி விடுகிறீர்கள். இந்துக்களுக்கு எதிராக வேலை செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு இந்த முறை இஸ்லாமியர் ஓட்டு கிடைக்காது. கிறிஸ்தவர்கள் ஓட்டும் கிடையாது. உங்கள் நாடகத்தை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள். ’தமிழகத்துக்கு போய் நான் இந்துக்களை திட்டுகிறேன். அப்போதுதான் எங்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போடுவார்கள்’’என்று நீங்கள் டெல்லியில் மறைமுகமாக பேசுவதை எல்லாம் மக்கள் அறிவார்கள்.

எதற்காக இந்த வேஷம்? நல்லவனை நல்லவன் என்று சொல்லுங்கள். கெட்டவனை கெட்டவன் என்று சொல்லுங்கள். உழைக்கிறவனை உழைக்கிறான் என்று சொல்லுங்கள். எங்கள் மீது வழக்கு இருப்பதாக சொல்கிறாய். உங்களுடன் உள்ள 22 முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் மீது முன் விசாரணை மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது. உடனே சொத்துக்குவித்து விட்டோம் கிள்ப்பி விடுகிறார் மு.க.ஸ்டாலின். சரி என் சொத்தை நீ எடுத்துக்கொள். உன்சொத்தை மட்டும் எனக்கு எழுதிக் கொடு.

 

 ஏமாற்றாதே. வயிற்றில் அடித்து பிழைக்காதே. உன்னை விடவே மாட்டோம். தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ல் உன்னை அடித்து விரட்டி திமுகவை சுக்குநூறாக உடைப்பது தான் எங்களுடைய நோக்கம். 2021ல் எடப்பாடி ஆட்சி தான் வரும். பிஜேபி ஆட்சியில் ஐந்து வருடம் உடந்தையாக அங்கம் வகித்தது திமுக நக்கிகள் தான். பாஜக ஆட்சியில் தான் பத்து திமுக மந்திரி இருந்தார்கள். ஐந்து வருடம் மந்திரியாக இருந்து நக்கிவிட்டு, இப்போது எங்களை எல்லாம் சங்கி என்று சொல்கிறார்கள்'’ என அவர் தெரிவித்துள்ளார்.