ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்.. வாண்டடாக வந்து சிக்கிய இபிஎஸ்? அதிர்ச்சியில் அதிமுக..!
வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் ஏப்ரல் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் திடீரென நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் பறந்த மனுவால் சிக்கல்.!
இதனையடுத்து, ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி. பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் வந்தபோது இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் ஏப்ரல் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் சார்பில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன்பு முறையிட்டார். ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்தனர். இதனால், இபிஎஸ் தரப்பு நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறது.