ஓபிஎஸ்  சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதிக்கு ஓபிஎஸ் மகன்  ரவீந்திர நாத்தும் சீட் கன்ஃபாம் தான். இந்த தொகுதியில் ஓபிஎஸ் மகனுக்காக  20-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்கள்.  தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஆர்க்கு சொந்த செல்வாக்கு, அசுர பண பலம், படை பலம், ஏற்கனவே செஞ்சி வச்ச வேலை, கூடுதலாக கூட்டணியில் சேர இருக்கும் தேமுதிகவால் விஜயகாந்த் ரசிகர்கள் படை பலம் என யார் எதிர்த்து நின்றாலும் டெபாசிட் காலி சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கடந்த சில வருடங்களாகவே ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால்,  இதனைத் தொடர்ந்து மகனை டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் ஓபிஎஸ் அரசியல் களத்தில் இறக்கினார்.

இதற்காக மாவட்ட ஜெ பேரவை  செயலாளர் பதவியை ரவீந்திர நாத்துக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தால் போதும். தாம் சிபாரிசு செய்யவேண்டிய அவசியம் இல்லை, கட்சியே ரவீந்திரநாத் சீட்  கொடுக்கும் என்பதால். தொடர்ந்து  கட்சிப்பணியில் ஈடுபடுத்தி வந்தார்.  

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரவீந்திரநாத்துக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  அவரது ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்களாம். முதல்முறையாக தேர்தலில் நின்றாலும் பழுத்த அரசியல் வாதிகளை விட பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளாராம். இந்த  தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேனி தொகுதியில் பணமழை வெளுத்து வாங்கும் என சொல்லப்படுகிறது.

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனுர், பெரியகுளம் என அதிமுக வாக்கு வங்கியை வலுவாக வைத்திருக்கும் தொகுதிகள்,  இந்த தொகுதிகளில் ஓபிஆர்க்கு சொந்த செல்வாக்கு, பணபலம் மட்டுமல்ல படை பலம், ஏற்கனவே செஞ்சி வச்ச வேலை என அசைக்கமுடியாத வேட்பாளராக இருக்கிறார். இந்த தொகுதியில் எதிரணியில் யார் நின்றாலும் தோல்விதான் மிஞ்சும் என சொல்கிறார்கள்.