தமிழக துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என சிவகங்கை எம்.பி. கார்த்திக்சிதம்பரம் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

தங்களது கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை கதறவிட்டு வெற்றி கனியை பறித்தவர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். இந்நிலையில் ரவீந்திரநாத்தை கார்த்திக்சிதம்பரம் பாராட்டி இருப்பது பெருதன்மையான புகழ்ச்சியா? அல்லது பாராட்டுவது போல் குத்திகாட்டும் வஞ்ச புகழ்ச்சியா? என்ற அதிர்ச்சியும் ஆச்சரியத்தை கலந்து பார்க்கின்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். 

தான் வெளிநாடு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தை கார்த்திக்சிதம்பரம் நாடியுள்ள நிலையில் தடை போட்டுள்ள உச்சநீதிமன்றமோ, வெளிநாடு செல்வது ஒருபுறம் இருக்கட்டும் முதலில் உங்களை தேர்ந்தெடுத்த மக்கள் உள்ள தொகுதிக்கு சென்று தொகுதியை கவனியுங்கள் என குட்டு வைத்தது.

 

இந்தநிலையில் தான் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த கார்த்திக்சிதம்பரம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், மக்களுக்கு நலனிற்காகதான் நீதிமன்றம் இந்த அறிவுரை கூறியுள்ளது. அதனால் நீதிமன்றத்தில் அறிவுரையை முழுமையாக ஏற்பதாக தெரிவித்தார். தன்னை ஒரு இளைஞன் என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி ஒருவேளை ஒபிஎஸ் மகனும் அமைச்சரானால் இளைஞரான அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.