ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள் அவரை அறிந்தவர்கள் என எல்லோருக்குமே பரிட்சயமான நபர் என்றால் அது ரமேஷ் தான். ஓபிஎஸ்-ன் உதவியாளராக அறியப்படும் இவர், ஓபிஎஸ்-ன் அக்கா வழி உறவினரும் கூட. ஓபிஎஸ் இடம் உதவியாளராக இருந்த போதும் கூட ரமேஷ் அவரை மாமா என்று தான் அழைப்பார். 

ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள் அவரை அறிந்தவர்கள் என எல்லோருக்குமே பரிட்சயமான நபர் என்றால் அது ரமேஷ் தான். ஓபிஎஸ்-ன் உதவியாளராக அறியப்படும் இவர், ஓபிஎஸ்-ன் அக்கா வழி உறவினரும் கூட. ஓபிஎஸ் இடம் உதவியாளராக இருந்த போதும் கூட ரமேஷ் அவரை மாமா என்று தான் அழைப்பார். 

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு நம்பிக்கையான உதவியாளராக இருந்த இவரை, இப்போது ஓரம்கட்டி இருக்கிறார் ஓபிஎஸ். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த ரமேஷ் தான் ஓபிஎஸ்-ன் எல்லா விதமான காண்ட்ராக்டுகளையும் மேலாண்மை செய்திருக்கிறார்.

சேகர் ரெட்டி வழக்கில் அவரது டைரியில் கூட பெரியவர் ரமேஷ் (3,50,00,000) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் பன்னீர் செல்வத்தை தான் காண்ட்ராக்டர்கள் மத்தியில் பெரியவர் என்று அழைப்பார்கள் என்பது கூறிப்பிடத்தக்கது. அவரது பெயருக்கு அருகில் மட்டுமல்ல அவரின் எல்லாவிதமான செயல்பாடுகளின் போதும் உடன் இருந்தவர் தான் இந்த ரமேஷ். பன்னீர் செல்வத்தை காண யார் வந்தாலும் அவர்கள் முதலில் சந்திக்க வேண்டியது ரமேஷை தான். அவர் மூலம் எந்த காரியம் நடக்க வேண்டும் என்றாலும் ரமேஷிடம் தான் அனுக வேண்டும்.

பெரிய பெரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் , காண்ட்ராக்டர்கள் என அனைவருக்குமே இது பொருந்தும். இவ்வளவு ஏன் பன்னீர் செல்வத்தின் குடும்ப உறுப்பினர்கள் கூட ரமேஷிடம் கேட்டுவிட்டு தான் பன்னீர் செல்வத்திடம் பேச முடியும். பன்னீர் செல்வத்தின் எல்லா நடவடிக்கைகளையும் அறிந்தவர் இவர் என்பதனால் தான் 2016ல் பன்னீர்செல்வம் மற்றும் சில முக்கிய அதிமுக புள்ளிகளை ஜெயலலிதா கிடுக்குப்பிடி விசாரணை செய்த போது, ரமேஷையும் சிறைபிடித்து வைத்திருந்தார்.

இத்தனை காலம் அவருக்கு எல்லா விதத்திலும் துணையாக இருந்து எந்த சூழ்நிலையிலும் காட்டிக்கொடுக்காமல் செயல்பட்ட ரமேஷை செப்டம்பர் 2 அன்று தன் வீட்டை விட்டே துரத்தி இருக்கிறார். 

இதனை ரமேஷ் தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த செய்தியில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.
“வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே வாழ்ந்த நான் துரோகியா? என் நினைவு தெரிந்ததில் இருந்து உங்களுக்காக மட்டுமே உழைத்தேன். என்னை ஒதுக்கு விட்டீர்கள். கலங்கவில்லை. என்னை துரோகி என்று சொல்லாதீர்கள் மாமா… மனது வலிக்கிறது” என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு காரணம் என்ன என அறிய முற்படும் போது இரண்டுவிதமான தகவல்கள் கிடைக்கின்றனர். இதில் பன்னீர் தரப்பினர் கூறும் காரணமோ “ ரமேஷுக்கு 40 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவர் வீட்டில் பிரச்சனை செய்கிறார்கள். 
அதனால் தான் ஓபிஎஸ் அவரை அனுப்பிவிட்டார் என்கின்றனர்.”

இன்னொரு பக்கம் “ ரமேஷ்க்கு பன்னீர் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது ஓபிஎஸ் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. எனவே ரமேஷை ஒதுக்க சமயம் பார்த்து காத்திருந்தனர்.

அதற்கு ஏற்ப ஓபிஎஸ்க்கு அவருக் காண்ட்ராக்டுகள் எல்லாம் இபிஎஸ் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே கடுப்பில் இருக்கிறார் ஓபிஎஸ். அவரிடம் போய் ரமேஷ் காண்ட்ராக்டர்களிடம் தனக்கு என தனியாக பணம் வாங்கி இருக்கிறார் என கூறி இருக்கின்றனர். 

இதனால் கடுப்பான ஓபிஎஸ் ரமேஷை விரட்டி விட்டார். தற்போது அந்த இடத்தில் பாலாஜி என்பவரை நியமித்திருக்கிறார் . என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ, ஓபிஎஸ் உடன் 20 வருடங்களுக்கும் மேலாக உடன் இருந்த ரமேஷுக்கு , அவரின் ஜாதகமே அத்துப்படி. இதனால் அவர் ஓபிஎஸ்க்கு எதிராக வாயை திறந்தால் பல ரகசியங்கள் வெளிவரக்கூடும். ஆனால் அவருக்கு விசுவாசமான ரமேஷ் இதை செய்வாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தானே!