ops says that their symbol is well known to people
புரட்சித் தலைவி அம்மா அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய இரட்டை மின்விளக்கு பொதுமக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. திமுக ஒருபக்கம் அனல் கூட்ட மறுபக்கம் டிடிவி தினகரன் மதுசூதனன் ஆகியோர் அமர்க்களமாக ஸ்கோர் செய்து வருகின்றனர்.
ஜனநாயகத் திருவிழாவான இத்தேர்தலில் மக்கள் யாரை வாழ்த்தப் போகிறார்கள், யாரை வீழ்த்தப் போகிறார்கள் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி..

தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கும், டிடிவி தினகரனுக்கும் கடும் போட்டியாக விளங்கும் ஓ.பன்னீர்செல்வம் நாளை முதல் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

""ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். எங்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை விளக்கு மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இரட்டை விளக்கில் ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா..இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறது" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
