நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை..! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.! ஓபிஎஸ்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்,காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றின் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
 

OPS said that no call has been received from the National Democratic Alliance for parliamentary election consultation KAK

காவிரி விவகாரம்- சட்ட விரோதம்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம், காவிரி நிர் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வது சட்டவிரோதம்.

காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடுத்து 172 டிஎம்சி நீர் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. . காவிரி நடுவர் மன்றம்  இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெறுவதற்கு உரிய முன்ன நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு அதிமுக ஆட்சியில் தான் உச்சநீதிமன்றம் எடுத்த சென்று  இறுதி தீர்புக்கு அரசாணை பெறப்பட்டது.

OPS said that no call has been received from the National Democratic Alliance for parliamentary election consultation KAK

அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை

காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையம் அமைக்க வேண்டும் அப்போது ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதன் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி நீர்  முறைப்படுத்தும் குழுவையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்ற கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.திமுக அரசு இதை முறையான சட்டப் பிரச்சனை மூலமாகவோ அல்லது பேச்சு வார்த்தை மூலமாகவோ துரித நடவடிக்கை எடுத்து அம்மா பெற்று தந்த நீரை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்தார். 

OPS said that no call has been received from the National Democratic Alliance for parliamentary election consultation KAK

அழைப்பு இல்லை

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுவரை இல்லையென கூறினார்.  அடுத்தகட்டமாக சசிகலாவை சந்தீப்பீர்களா என்ற கேள்விக்கு இதுவரை பார்க்கவில்லை, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார். தனது புரட்சிப் பயணம் மீண்டும் தொடங்கும் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வரவில்லையா.? மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய தமிழக அரசு - என்ன செய்யனும் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios