மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வரவில்லையா.? மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய தமிழக அரசு - என்ன செய்யனும் தெரியுமா?

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பான விளங்கங்களுடன் எஸ்எஸ்எஸ் இன்று முதல் அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதனையடுத்து குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என கூறியுள்ளது.

The Tamil Nadu government has announced that those who do not get magalir urimai thogai can appeal from today KAK

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக சுமார் 1 கோடியே 67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்ததனர். குறிப்பாக அதிக மின் கட்டணம், ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் விண்ணப்பதாரர்களின்  விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது . 

The Tamil Nadu government has announced that those who do not get magalir urimai thogai can appeal from today KAK

நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன.?

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின்  விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு (18.09.2023) இன்று  முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளது.  இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The Tamil Nadu government has announced that those who do not get magalir urimai thogai can appeal from today KAK

 முறையீடு செய்ய கால அவகாசம்

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

இதையும் படியுங்கள்

மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்த வங்கிகள்..! எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios