Anyone found guilty of treason for the sister not sticky they are not related in any of the meeting pointed out that the Sasikala

உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய ஒபிஎஸ், தர்போது சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது பேசிய ஒபிஎஸ் பல கருத்துக்களை முன் வைத்து பேசினார் .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாக்ருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், அம்மா சிகிச்சை குறித்த அனைத்து விவரமும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறியது பொய் தகவல் என ஒபிஎஸ் பளார் பதிலடி கொடுத்து, தன்னுடைய உண்ண விரதத்தை முடித்துக்கொண்டார் .

குறிப்பாக , ஜெ இறந்த பிறகு சசிகலா ஆற்றிய உரையை பற்றி பேசிய ஒபிஎஸ்,

“அக்காவுக்கு எதிரான சதித்திட்டம் நடைப்பெறுவதை அறிந்த எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது,

அக்காவுக்கு வேண்டாதவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்

அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என சசிகலா பேசியதை சுட்டி காட்டினார் ஒபிஎஸ்

மேலும், “ தனக்கு அரசியலில் ஈடுபடவோ , ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ விருப்பம் இல்லை , அக்காவுக்கு உண்மையான தங்கையாக மட்டுமே இருக்க விரும்புவதாக தெரிவித்த சசிகலா , சொன்னது என்ன ? தற்போது செய்தது என்ன என தாறுமாறு கேள்வி எழுப்பி தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஒபிஎஸ்