தமிழக அரசின் நிலையை விளக்கமாகவும், விரிவாகவும் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்தாகவும், அதிமுக அணிகள் இணைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், கே.பி. முனுசாமி, செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட ஓ.பி.எஸ்., வெங்கைய்யா நாயுடு பதவியேற்புக்காக வந்திருந்தோம், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தோம் என்றார்.

அப்போது, தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துக்களை பிரதமரிடம் ஆலோசனை நடத்தினோம். தற்போதைய தமிழக அரசின் நிலையை விளக்கமாகவும், விரிவாகவும் எடுத்துக் கூறியுள்ளேன்.

அதிமுக அணிகள் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் விவாதிக்கப்பட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.