நீட் தேர்வு மருத்துவ கல்வியில் கொண்டு வந்ததைப்போல், தொழிற்கல்வியிலும் கொண்டு வர அனுமதிக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளர்.

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் இணைந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

மருத்துவ துறையில் நீட் நுழைவு தேர்வு கொண்டு வந்ததைப்போல், தொழிற்கல்வியிலும் நீட் தேர்வு கொண்டு வராமல் மாணவர்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நடிகர் கமல் ஹாசன் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் கமலின் விமர்சனம் தனிப்பட்ட கருத்து என்றும், ஒரு தனி நபர் அரசியலுக்கு வர உரிமை உள்ளது என்றும் கூறினார்.

கதிராமங்கலத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடுவதற்கு முன்பாக, தமிழக அரசு சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.