அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியா.? தேர்தல் ஆணையத்தில் புதிய மனு கொடுத்து செக் வைத்த ஓபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பத்து நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் இதனை அங்கீகரிக்காமல் தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையை மட்டும் உறுதி படுத்தி வருகிறது. இந்தநிலையில் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழினிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
டெல்லி நீதிமன்றம் உத்தரவு
அப்போது கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், 10 நாட்களில் அ.தி.மு.க. சட்டவிதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கோரி ஈ.பிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் மனு
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏதளனும் மனு அளிக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும், அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாதகவும் கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்