கர்நாடக தேர்தலுக்காக கட்டுக்கட்டாக பணத்தோடு ஹெலிகாப்டரில் வந்தேனா.? புகாருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை
அண்ணாமலை உடுப்பி மாவட்டத்திற்கு கட்டுக்கட்டாக பணம் அடங்கிய பேக் உடன் ஹெலிகாப்டரில் வந்ததாக காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் கூறிய நிலையில், நேரம் விரையத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் வந்ததாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தீவிரம் அடையும் கர்நாடக தேர்தல்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடித்தால் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடலாம் என இரு தரப்பும் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகவை தக்கவைக்க தீவிரமாக களம் இறங்கி வேலை செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளாரக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளார். இருந்த போதும் கர்நாடகவில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கை வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை உளறுகிறார்..! அவர் பேச்சை கண்டுகொள்ள வேண்டியதில்லை- இறங்கி அடிக்கும் கேஎஸ் அழகிரி
ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை
இந்தநிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கெளப் தொகுதி வேட்பாளருமான வினய்குமார் சொரகே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதில், தமிழக பாஜக தலைவரும், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் வந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் அடங்கிய பேக் இருந்ததாக கூறியுள்ளார். இந்த பணம் வாக்களிப்பதற்காக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்து இருந்தது.
ஹெலிகாப்டரில் வந்தது ஏன்.?
இந்தநிலையில் இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது. உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன். எனவே தேர்தல் நேரத்தில் கால விரையத்தை குறைப்பதற்காகவுமே ஹெலிகாப்டரில் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியினர் தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் எங்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர மாட்டீங்களா.? தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த அரசு தேர்வு துறை