Ops vacated greenways road house and settled in a new house in venus colony

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அடையாறு அரசு பங்களாவை காலி செய்து வீட்டு போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீனஸ் காலனி முதல் தெரு வீட்டில் குடியேறியுள்ளார். இதற்கான பால்காய்ச்சும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்தியதையடுத்து அதிமுக இரண்டாக பிளந்தது. ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதேநேரத்தில் சசிகலா சிறை சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

ஓபிஎஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பதவியேற்ற போது அடையாறில் உள்ள தென் பெண்ணை என்ற அரசு பங்களாவில் குடியேறினார், தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக ஓபிஎஸ் இந்த பங்களாவில் குடியிருந்து வந்தார்.

சசிகலாவுடன் நடைபெற்ற அதிகார போட்டியில் ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை இழந்ததையடுத்த அவர் குடியிருக்கும் வீட்டை காலி பண்ண வேண்டும் என்று பொதுப் பணித்துறை சார்பில் ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு வீட்டை காலி செய்யச் சொல்லி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் ஓபிஎஸ் வேறு பகுதியில் வீடு பார்த்தார்,

இந்நிலையில் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீனஸ் காலனி முதல் தெருவில் ஓபிஎஸ் வீடு பார்த்து அங்கு குடியேற முடிவு செய்தார்.

தொண்டர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்து ஓபிஎஸ் ஐ சந்திக்கும் வகையில் வீடு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அதற்கு வசதியான வீடாக வீனஸ் காலனி வீடு உள்ளது,

அந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வீனஸ் காலனி வீட்டிடல் ஓபிஎஸ் பால் காய்ச்சி குடியேறினார்.