திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறாதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால்  அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் பெயர் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே துணை முதல்வர் பெயர் இருக்கும். இது சென்னை மண்டல அளவிலான நிகழ்ச்சி. ஆகையால், ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லாததில் எந்த உள்நோக்கமும் இல்லை. செயற்குழு தீர்மானப்படி கட்சி வேலைகளை செய்ததால் ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்தார்.