தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள் போயஸ் கார்டன் வந்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம், உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களும் போயஸ் கார்டன் வந்துள்ளனர். போயஸ் கார்டனில் பொதுச்செயலாளர் சசிகலாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும் போயஸ் கார்டன் வந்துள்ளனர்.

இன்று தம்பிதுரை முதல்வராக சசிகலா வரவேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இந்த கூட்டம் நடந்துள்ளது.