ஓபிஎஸ் விளங்காமல் போக பண்ருட்டி ராமச்சந்திரன் போதும்... சி.வி. சண்முகம் ஆவேசம்!!

தன்னையும் தன் குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க ஓபிஎஸ் அதிமுகவை குறை சொல்லி வருவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

ops is blaming admk to protect himself and his family property says cv shanmugam

தன்னையும் தன் குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க ஓபிஎஸ் அதிமுகவை குறை சொல்லி வருவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், அதிமுகவால் சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அனுபவித்த ருசி கண்ட பூனை ஓபிஎஸ். இன்று தன்னையும் தன் குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க அதிமுகவை குறை சொல்லிக்கொண்டு வருகிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் தோல்வி குறித்து ஓபிஎஸ் விமர்சிக்கிறார். கடந்த 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த பகுதியான தேனியில் ஒரே தொகுதியில் மட்டுமே பன்னீர்செல்வத்தால் வெற்றி பெற முடிந்தது.

இதையும் படிங்க: இந்த ஆட்சியில பெண்கள் நடமாட முடியல... திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!!

பல்வேறு பதவிகளை வைத்துக்கொண்டு அவர் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. பிற தொகுதிகளில் ஜெயிக்க அருகதையற்றவருக்கு அதிமுகவை குறை சொல்ல தகுதி இல்லை. கடந்த காலத்தில் ஓபிஎஸ் சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை/ அந்த இடைத்தேர்தலில் ஆட்சியை நிலை நிறுத்த அத்தொகுதி இடைத்தேர்தல் முக்கிய வாய்ந்ததாக  இருந்தது. சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத ஓபிஎஸ் அதிமுகவின் தோல்வியை குறித்து குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை.

இதையும் படிங்க: சும்மா காமெடி பண்ணாதீங்க! ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடுவதா? சிரிப்புதான் வருது! டிடிவி.தினகரன்.!

ஓபிஎஸ் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. பதவி வெறி பிடித்த மனிதர். ஓபிஎஸ் மட்டுமல்ல அதிமுகவை ஒழிக்க பல துரோகிகள் பல பேர் உள்ளனர். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஓபிஎஸ் போன்று பல்வேறு துரோகிகளின் நிலை என்ன ஆயிற்று? ஓபிஎஸ் விளங்காமல் போக பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே போதும். அவர் சென்ற எந்த இடமும் விளங்கியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன்ஆமை, அது புகுந்த இடம் விளங்கியதில்லை. துரோகத்தின் மறுபெயர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios