பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் குஜராத் சென்றுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மரணம்

பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிரு்தார். இதனையடுத்து குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற பிரதமர் மோடி, தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து உடனடியாக ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, , தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, , முதலமைச்சர் மு க ஸ்டாலின் , எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

கலங்காமல் கடமையைச் செய்யும் மோடி! புதிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!

இந்தநிலையில் தனது தாயாரின் இறுதிச்சடங்கை முடித்த கையுடன் காணொலி வாயிலாக கொல்கத்தா வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நேரில் வரமுடியாததற்காக மேற்குவங்க மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஏற்கனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை குஜராத்செல்ல விமான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றடைந்தார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திந்த அவர், பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக குஜராத் செல்வதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கடிதம் தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த அவர். கழக சட்ட விதிப்படி தேர்தல் நடைபெற்றது. தொண்டர்கள் மூலமாக ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இடையில் செயற்கையாக பதவிகளை உருவாக்கினார். ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்றே கூறி வருகிறது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவு..! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்