நான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன் என உருக்கமாக பேசியிருக்கிறார்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

தமிழகத்தில் லோக்சபா தேர்தலும் 18 தொகுதி சட்டசபை தேர்தலும் முடிந்துள்ளது. இன்னும் 4 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் மீண்டும் களைகட்டி இருக்கிறது. சட்டசபை இடைத் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  திமுக, ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண்கிறது. திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டிலும் படுதோல்வியை சந்திக்கும். மொத்தமாக திமுக தலைவர் ஸ்டாலினின் ஆட்சியை பிடிக்கும் கனவு காணாமல் போகும் அளவிற்கு மக்கள் சரியான பாடம் புகற்றுவார்கள். 

தற்போதுள்ள சூழலில் அதிமுக கட்சி சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. எங்களின் ஆட்சியை ஜெயலலிதா, வானத்தில் இருந்து  பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். 

அதனால், அந்த பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால் நாங்கள் அந்த பயத்தில்தான் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். அவரின் வழியில்தான் அதிமுக ஆட்சி சென்று கொண்டு இருக்கிறது. எப்போதும் அவர் வழி காட்டிய திசையில் நாங்கள் பயணிப்போம் என்று கூறியிருக்கிறார்.  

மேலும் பேசிய அவர், நான் எப்போதும் அதிமுகவின் தொண்டன். என்னுடைய மரணம் வரை நான் அதிமுகவின் தொண்டனாகவே இருப்பேன். நான் பாஜக அல்ல வேறு எந்த கட்சியிலும் என் வாழ்நாள் முழுக்க சேர மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.