முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரின் இலாகாக்களை கவனிக்கும் ஓபிஎஸ் கிட்டத்தட்ட முதல்வர் அந்தஸ்த்தில் இருப்பபவர் , கடந்த தீபாவளிக்கும் ஓபிஎஸ்சே முதல்வராக இருந்தார். ஆகவே கடந்த தீபாவளியில் முதல்வராக இருந்தது போலவே இந்த முறையும் முதல்வராக ஓபிஎஸ் இருப்பதால் அவர் இரண்டு தீபாவளிக்கும் முதல்வராக இருக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால் அவர் வழக்கு விசாரணையில் இருந்ததால் முதல்வராக நீடிக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் தற்காலிகமாக ஓபிஎஸ் முதலமைச்சரானார். அப்போது வந்த தீபாவளி நேரத்தில் முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி வகித்தார். 

அதன் பின்னர் வழக்கில் வென்ற ஜெயலலிதா பின்னர் ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்வராகவும் ஆனார். அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நல்ல்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டி இருந்ததால் மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா கவனிக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஓபிஎஸ் வசம் வந்தது.

 அமைச்சரவை கூட்டத்துக்கும் அவரே தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட முதல்வர் பொறுப்பு போன்றதுதான் . இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா இருந்தாலும் இலாகா உள்ள முதல்வராக இருப்பவர் ஓபிஎஸ் என்பதால் தொடர்ந்து இரண்டாவது தீபாவளிக்கும் ஓபிஎஸ் முதல்வராக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.