அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரனை சேர்க்க வேண்டும் என தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்யின் சொந்த மாவட்டத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள், எப்படி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை ஓபிஎஸ்-யிடம் கொண்டு சேர்த்தார்கள் என்கிற கேள்வி எழாமல் இல்லை.

திருச்செந்தூர் செல்லும் சசிகலாவை சந்தித்து கட்சி தலைமை ஏற்க வருமாறு வலியுறுத்தப்போவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரனை சேர்க்க வேண்டும் என தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்யின் சொந்த மாவட்டத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள், எப்படி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை ஓபிஎஸ்-யிடம் கொண்டு சேர்த்தார்கள் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஓபிஎஸ் விருப்பம் இல்லாமல் இந்த முயற்சி சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதும், மற்றொரு புறம் தேனி மாவட்ட கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்திப்பதும் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், இன்று காலை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, திருநெல்வேலி KTC நகர் பாலம், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி சென்றடைகிறார். அங்கு ஸ்ரீ விஸ்வாமித்திரர் திருக்கோயிலுக்கு சென்று வழிபடுகிறார். அதனை தொடர்ந்து உவரி வழியாக திருச்செந்தூர் செல்கிறார். அன்று மாலை திருச்செந்தூரில் அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயிலுக்கு சென்று ஸ்ரீ முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார்.

பின்னர் மறுநாள் 05-03-2022 சனிக்கிழமை அன்று காலை 7.30 மணிக்கு, திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி கொக்கிரகுளம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை. ஆலங்குளம், பாவூர் சத்திரம், தென்காசி வழியாக இலஞ்சி செல்கிறார். அங்கு, அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து அகத்தியர் பாதம் சென்று தரிசனம் முடித்து அங்கிருந்து புறப்பட்டு கடையநல்லூர், புளியங்குடி. வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், T.கல்லுப்பட்டி, திருமங்கலம் பை பாஸ் வழியாக மதுரை விமான நிலையம் அடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா திருச்செந்தூரில் இன்று சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கட்சி தலைமை ஏற்க வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள சந்திப்பால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.