அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸின் ச்கோதரர் ஓ.ராஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில்  செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவித் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. கொள்கை, கோட்பாடு, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்’ என அறிவிக்கபட்டுள்ளது.

 
  
எதற்காக நீகப்பட்டார்..? ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியின்போது, தேனியில் ஒரு தற்கொலை வழக்கில் பன்னீரின் தம்பி ஓ.ராஜாவின் தலை வெகுவாக உருட்டப்பட்டது. இதற்காக ஜெயலலிதாவிடம் மிக மோசமாக வாங்கிக் கட்டினார் ஓ.பி.எஸ். 

இப்போது ஜெயலலிதா இல்லாமல், பன்னீரே அக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிலையிலும் ஓ.ராஜாவால் பன்னீருக்கு பெரும் பிரச்னைகளை உருவாக்கி கொண்டு வந்தார். சமீபகாலமாக மணல் கடத்தல் புகாரில் ஓ.ராஜா பெயர் அடிபட, ஓ.பி.எஸ் மீண்டும் தலைவலியில் சிக்கினார்.

 

“ஏற்கனவே கட்சி பெயரு கேடு கெட்டு கிடக்குது இங்கே. இதுல ராஜாவோட ஆட்டத்தால் பன்னீருக்கும் சேர்ந்து தலைவலி, கட்சிக்கும் பெரிய அடி. பன்னீர்செல்வம் துவக்க காலத்துல தன் தம்பி ராஜாவை வளர்த்துத்தான் விட்டாரு. ஆனால் சமீப காலமா பன்னீரின் மகன் ரவீந்திரநாத்  ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்ச பிறகு, ராஜாவை ஓரங்கட்டிட்டார் பன்னீர். பல முறை முறையிட்டும் அண்ணன் அசைஞ்சு தராததால தான் தோண்றித்தனமா பல வேலைகளை செய்தார்.

‘தம்பி உங்களாலே அண்ணன் பேர் கெடுது’ன்னு சொன்னால், ‘அதுக்கு நான் என்ன பண்ண? நானும் பொழைக்க வேண்டாமா?’ன்னு கேட்கிறார் எனக் கூறி வந்தனர். இந்த நிலையில் ஓ.ராஜா கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டுள்ளார்.