3ம் முறை அதிமுக ஆட்சி அமைக்கும் என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓட்டளித்தப்பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்த நாள் வந்து விட்டது. 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்தில், இக்கட்டான சூழலில் தேர்தல் நடைபெறுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் தங்கள் கடமைகளை செவ்வனே செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.போடியில் போட்டியிடும் அவர் பெரியகுளத்தில் தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்; அதிமுக வேட்பாளர்கள் பலரும் வெற்றிபெறுவார்கள். அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் 3 வது முறை மீண்டும் ஆட்சியை அமைக்கும்'' என அவர் அடித்துக் கூறினார். ஓ.பி.எஸ் இப்படிக்கூறியதை திமுக தரப்பு உற்று நோக்கி வருகிறது.