இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது யாரென்று உங்களுக்கே தெரியும். திமுக இந்திக்கு எதிர்ப்பு அல்ல, இந்தி ஆதிக்கத்திற்கு தான் எதிர்ப்பு’’என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் அட்டையை திமுக இளைஞரணி அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘’தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. அப்போது தமிழகத்தில் அமையப் போவது திமுக ஆட்சிதான் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். முதல்வர் நாற்காலியில் அமரப் போவது தலைவர் ஸ்டாலின் தான். அவர் முதல்வர் ஆகக் கூடாது என்று சிலர் தினமும் சமூக வலைத்தளங்களில் நமக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். 

 திராவிடத் தலைவர்களான அண்ணா, கலைஞர் அவர்களின் சாதனைகளை சொல்ல தவறி விட்டோமோ? என்ற குறை இருக்கிறது. அதனை முறியடிக்க நமது கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். திமுக தலைமை அறிவித்தால் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடந்தவும் தயார் எனக் கூறி சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்பு அளிப்பதை தலைமை தான் முடிவு செய்யும்.
 
இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது யாரென்று உங்களுக்கே தெரியும். திமுக இந்திக்கு எதிர்ப்பு அல்ல, இந்தி ஆதிக்கத்திற்கு தான் எதிர்ப்பு’’என்று அவர் கூறினார்.