opposition leader stalin criticize minister vijayabaskar
நயவஞ்சகத்தின் மறு உருவமே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
டெங்குவால் மக்கள் இறந்துகொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் கோடி கோடியாக செலவு செய்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை புதுக்கோட்டையில் கொண்டாடினர். கட்சி விழாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு விழாவில், ஸ்டாலினின் பயங்கரமான ஆயுதம் அவரது நயவஞ்சக நாக்கு என என்னை விமர்சித்துள்ளார். நயவஞ்சகத்தின் மறு உருவமே அமைச்சர் விஜயபாஸ்கர் தான்.
விஜயபாஸ்கர், குட்கா பாஸ்கரிலிருந்து தற்போது டெங்கு பாஸ்கராக மாறிவிட்டார். வருமான வரி சோதனை தொடர்பாகவும் குட்கா ஊழல் தொடர்பாகவும் அவரிடம் பதில் இல்லை. குட்கா விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன் என விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் இதுவரை என் மீது வழக்குப் போடவில்லை. விஜயபாஸ்கருக்கு சூடு சொரணை இருந்தால் என் மீது வழக்குப் போடட்டும். பின்னர் பதில் சொல்கிறேன்.
இவ்வாறு தன்னை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கரை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.
