கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பிரமாண்டமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால்  2019 ஆம் ஆண்டில் மட்டும் ஆளுங்கட்சியாக இருந்த பாஜக  5 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
.
தேசத்திற்கு தற்போது வந்திருப்பது ஏதோ சாதாரண பிரச்சினை அல்ல, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்துக்களுக்கு அனுமதி, ஆனால் இலங்கை இந்துக்களுக்கு அனுமதி இல்லை; இதற்கு தர்க்கரீதியாக நியாயம் கற்பிக்க முடியாது என சிதம்பரம் குற்றம்சாட்டினார்..

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல, எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும் எனவும், அதற்கு இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநிலம் ஒரு உதாரணம் என தெரிவித்தார்.