opp. to dinakaran
ஜெயலலிதா சிலையை திறக்க தகுதி இல்லை… தினகரனுக்கு கறுப்பு கொடி காட்டிய அதிமுகவினர்…

திருநின்றவூரில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை திறப்பதற்காக சென்ற அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக வினர் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருநின்றவூர் சென்றார்.
திருநின்றவூர் மேம்பாலம் அருகே திரண்ட அதிமுகவினர், ஜெயலலிதாவின் சிலையை திறக்க தினகரனுக்கு தகுதி இல்லை என கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவருக்கு கறுப்புக் கொடி காட்டினர். இதனால் அங்கு நிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து சிலைகளைத் திறந்து வைத்துப் பேசிய தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தெரிவித்தார்.
ஜெயலலிதாவால் பதவி பெற்றவர்களே அதிமுகவை அழிக்கத் துடிக்கிறார்கள்என்றும் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.
