நெல்லை கண்ணனை கைது செய்யப்பட்ட பிறகு ஹெச்.ராஜா ’ஆபரேஷன் சக்சஸ்’என தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்ததற்கு தற்போது ஆபரேஷன் பெயிலியர் என சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு திருநெல்வேலி முதல்மை அமர்ச்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் அண்மையில் நடைபெற்ற குடியுரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகியும், தமிழ் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பேச்சாளா் நெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸார் கைது செய்தனா். பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை கண்ணன் தரப்பில் ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையில், நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

Scroll to load tweet…

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை!! ஆபரேசன் பெயிலியர்’’எனத் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா சொன்ன ஆபரேஷன் சக்சஸ் பதிவுக்கு பதியலடியாக சீமான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…