பரபரக்கும் அரசியல் களம்.. இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறார்.. விட்டதை பிடிப்பாரா?

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 

OPanneerselvam to meet PM Modi at Trichy airport tvk

பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதலில் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 

இதையும் படிங்க;- பொங்கல் பரிசு எவ்வளவு? தமிழக அரசின் திட்டம் இதுதான்!

OPanneerselvam to meet PM Modi at Trichy airport tvk

இதனையடுத்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள புதிய அணு உலை, ரயில்வே துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.19,850 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளிலும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க;-  திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை!

OPanneerselvam to meet PM Modi at Trichy airport tvk

இந்நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் அதிமுக வழக்கு குறித்து இருவரும் ஆலோசிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios