ரஜினியை வாழ்த்தி தேனி நாடாளுமன்ற உருப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள வாழ்த்து அட்டை ரஜினியை பாஜகவுக்கு அழைப்பதை போல அமைந்துள்ளது.

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அவரை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஓ.பி.ரவீந்த்திரநாத்தும் அப்படி ஒரு வரவேற்பு அட்டையை வடிவமைத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

அதில், ’’வாழவைக்கும் தென்துருவத்திற்கும், வரவேற்கும் வடதுருவத்திற்கும், பெருமையாய் நிலைத்து, வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவிருக்கும், ஈர்ப்புவிசைமிக்க ரசிகர்களின் காந்தம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்த்துக்கள்’’என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வடிவமைத்துள்ள இந்த கார்டில் ரஜினி போட்டோவுக்கு பக்கத்தில் சிவப்பு கலர் துண்டு வைக்கப்பட்டுள்ளது. நேரடியாக காவி துண்டு போட்டால் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு என கிளப்பி விடுவார்கள் என சிவப்பு துண்டு போடப்பட்டுள்ளது. சிவப்பு கலர் என்பதும் ஆன்மீகத்தை குறிப்பதே. 

அதே போல் வரவேற்கும் வடதுருவம் என்று கூறியிருப்பது பாஜக ரஜினியை வரவேற்பதை அவர் சுட்டிக் காட்டுவதாகவே பொருள்படுகிறது.  ஆக மொத்தத்தில் இந்த வரவேற்பு கார்டு மூலம் ரஜினியை ஓ.பி.ரவீந்திரநாத் பாஜகவுக்கு அழைப்பதாகவே பார்க்கப்படுகிறது.