Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் ஒரு தொகுதி மட்டுமே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு... கொத்தாக அள்ள திமுக பலே திட்டம்..!

தமிழகத்தில் சென்னையில் ஒரே ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு மற்ற எல்லா தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகிறது.
 

Only one constituency in Chennai has been allotted to the Coalition Party in dmk alliance
Author
Chennai, First Published Mar 13, 2021, 8:21 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிகள் முடிவாகி, வேட்பாளர்கள் அறிவித்து பிரசாரத்துக்கு தயாராகிவிட்டன. இந்த முறை தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது. திமுக கூட்டணியில் வேளச்சேரியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது. எஞ்சிய தொகுதிகளில் திமுகவே களம் காண்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மயிலாப்பூர், ராயபுரம் ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது. இந்த முறை இந்த இரு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகிறது.

Only one constituency in Chennai has been allotted to the Coalition Party in dmk alliance
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் பெரும்பாலானா தொகுதிகளில் திமுகவே களம் காண்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பொன்னேரியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது. எஞ்சிய 9 தொகுதிகளில் திமுகவே போட்டியிடுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த மாவட்டத்தில் திருப்போரூர், செய்யூர் ஆகிய தொகுதிகளை விசிகவுக்கும் மதுராந்தகத்தை மதிமுகவுக்கும் திமுக விட்டுக்கொடுத்துள்ளது.Only one constituency in Chennai has been allotted to the Coalition Party in dmk alliance

சென்னையில் கொத்தாக தொகுதிகளை அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் திமுகவே இங்கு களம் காண்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை 16 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதற்காக பல வியூகங்களை திமுக வகுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios