Asianet News TamilAsianet News Tamil

#BREAKING வீடு வீடாக 5 பேர் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி... தேர்தல் ஆணையம் புதிய நிபந்தனை..!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. விருப்பப்பட்டால் தபால் வாக்களிக்கலாம், இல்லை நேரில் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். 

Only 5 people are allowed to election campaign from house to house... election commissioner sunil arora
Author
Delhi, First Published Feb 26, 2021, 5:12 PM IST

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. விருப்பப்பட்டால் தபால் வாக்களிக்கலாம், இல்லை நேரில் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா;- தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தலை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன; அதில் தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள். தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது 

5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.66 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வாக்கு கேட்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios