“உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” பிரச்சார கூட்டம்.. எந்த மாவட்டத்தில் யார் பங்கேற்கிறார்கள்.? திமுக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பாக “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள கூட்டங்களில் பங்கேற்கவுள்ள திமுக நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் பரப்புரை கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தபடுகிறது. திமுக சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். முதல் நாளான இன்று சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், திருபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டம்
நாளை 17 ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருச்சி, அரக்கோணம், திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதேபோல 18 ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தர்மபுரி, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் முதற்கட்ட பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., சிவகங்கையில் அமைச்சர் பெரியசாமி, கடலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,
எந்த மாவட்டத்தில் யார் பங்கேற்பு
விழுப்புரத்தில் ஆ.எஸ்.பாரதி, தூத்துக்குடியில் பொன்.முத்துராமலிங்கம், ஸ்ரீபெரும்புதூர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல்லில் தமிழச்சி தங்கபாண்டியன், கன்னியாகுமரியில் திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறையில் சபாபதிமோகன், திருவண்ணாமலையில் கோவி.செழியன் ஆகியோர் மேற்கண்ட 11 இடங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர் என திமுக தலைமை அறிவித்துள்ளது
இதையும் படியுங்கள்