யாரும் பயப்பட வேண்டாம்! இந்த வைரஸ் விரீயம் குறைவு தான்! இவங்க மட்டும் கொஞ்சம் உஷாரா இருங்க.. அமைச்சர் மா.சு.!
ஒருவேளை பரவல் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500 ஐ தாண்டும் போது பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும். தொற்று பரவல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாஸ்க் அணிவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க;- ஆயிரம் முறை பேசி உள்ளேன் ஒரு முறை கூட என் முகத்தை காட்டவில்லை..!எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்வதாகவும் கட்சிக்கு ஒருவர் வீதம் பேசலாம் என சபாநாயகர் அறிவித்ததன் அடிப்படையில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- ஒமிக்ரான் XBB 1.16 வைரஸ் புதிதாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவமனைகளில் பரவல் அதிகரிப்பது தெரிந்ததால் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவமனைகளில் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு மக்கள் மாஸ்க் அணிவது குறைந்துள்ளதாகவும், மக்கள் மாஸ்க் அணிவது நல்லது அவசியம் என கூறினார்.
இதையும் படிங்க;- எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றிடுக..! ஓபிஎஸ்க்கு எதிராக சட்டப்பேரவையில் இறங்கி அடிக்கும் எடப்பாடி
தற்போது பரவி வரும் கொரோனா பரவல் தீவிரமாக இல்லை. ஆக்சிஜன் அல்லது அதி தீவிர சிகிச்சை தேவைப்படும் வகையில் இல்லை. அதனால் இந்த பரவலை 4வது அலை என கூற முடியாது. அதனால் பெரிய அளவிலான பதற்றமான சூழல் இல்லை. இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த பாதிப்பு வந்தாலும் அவர்கள் இறப்பை சந்திக்க நேரிடும். அவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவேளை பரவல் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500 ஐ தாண்டும் போது பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். தொற்று அதிகரித்தால் அதனை எதிர்ககொள்ள அனைத்து வகையிலும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.