ஆயிரம் முறை பேசி உள்ளேன் ஒரு முறை கூட என் முகத்தை காட்டவில்லை..!எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்
முக்கிய எதிர்கட்சியான அதிமுக பேரவையில் எழுப்பும் கருத்துக்கள் நேரடி ஓளிபரப்பு செய்யப்படுவதில்லைன எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிய நிலையில், எதிர்கட்சியாக இருந்தபோது 1000 முறை பேசி உள்ளேன் ஓரு முறை கூட முகத்தை காட்டவில்லை என துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் இல்லாத நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய கருத்துக்களின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை உள்ள நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதாக அறிவித்திருந்தது. தற்போது 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டுள்ளதாக திமுக கூறியுள்ள நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை ஏன் நேரடி ஒளிபரப்பு செய்வது இல்லை என கேள்வி எழுப்பினார். மேலும் அமைச்சர்களின் பதில்கள் மட்டும் ஒளிபரப்பப்படுவதால் கேள்விகளை எந்த கட்சி முன்னெடுத்தது என மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லையென கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரான துரைமுருகன், நீங்கள் கூறிய அதே குற்றச்சாட்டுகளை நாங்கள் கடந்த காலத்தில் எதிர் கட்சிகளாக இருக்கும்போது கூறியதாகவும், ஒருமுறை கூட முகத்தை காட்டவில்லை என தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆயிரம் முறை தான் பேசி உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து பேசிய சட்டபேரவை தலைவர் அப்பாவு, உங்கள் கருத்தை பதிவு செய்ய கூடாது என நானோ, முதல்வரோ, சபையோ விரும்பவில்லை, தொடர்ந்து நீங்கள் கேட்கும் போதெல்லாம் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எதிர்க்கட்சிகள் நேரம் இல்லா நேரத்தில்பேசும் போதும், பிரச்சனையை எழுதும் போது அது குறித்த பதில் அமைச்சரிடம் இருந்தால் தான் அதற்கு பதிலாக அமைச்சர்கள் கூறமுடியும். அவ்வாறு பதில் கருத்து அமைச்சரிடம் இல்லாவிடில் நேரலையாக எதிர்கட்சிகளின் கருத்து ஒளிபரப்பப்பட்டால் ஒரு தரப்பு கருத்து மட்டுமே ஊடகத்தில் வெளிவரும். இது சரியானது இருக்காது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்