இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,903 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,62,483 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 1,053 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,935 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 180 க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 3.15  கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.69 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 2.31 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை அடுத்து நோய் பரவலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இதுவரை 55 லட்சத்து 62 ஆயிரத்து 483 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74, 903 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 நோயாளிகள் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 45 இலட்சத்தை எட்டியுள்ளது. குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 44,97, 867 ஆகும்.  நாட்டில் மீட்பு விகிதம் என்பது 80.86% ஆக உள்ளது. 

செயலில் உள்ள  நோயாளிகள் எண்ணிக்கை 17. 54 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 1.59 சதவீதமாக பதிவாகி உள்ளது. நேர்மறை விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 9,33,185 சோதனைகள் நடந்துள்ளன. இதன் மூலம் இதுவரை செய்யப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 6,53,25,779 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 19,41,238  பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதில் 17,23,066 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். செப்டம்பரில் மட்டும் சுமார் 24,466 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 236 நாட்களில் 55 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது பதிவாகி உள்ளது. என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.