Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே.. சென்னைக்கு அருகில் கரையை கடக்குமாம்.. வானிலை மையம் பயங்கர எச்சரிக்கை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  வங்க கடல் பகுதிகள் 18.11.2021: தென்மேற்கு வங்க கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

Oh my God .. barometric depression will cross the border near Chennai .. Weather Center Terrible warning.
Author
Chennai, First Published Nov 18, 2021, 2:26 PM IST

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது, இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்  இதன் காரணமாக

18.11.2021 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம்   மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், திருச்சிராப்பள்ளி, கரூர் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Oh my God .. barometric depression will cross the border near Chennai .. Weather Center Terrible warning.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.19.11.2021: திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

20.11.2021, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 21.11.2021:, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

22.11.2021 வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

Oh my God .. barometric depression will cross the border near Chennai .. Weather Center Terrible warning.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குந்தலம் (திருப்பூர்) 20, தாராபுரம் (திருப்பூர்) 13, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருப்பூர் ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்), பந்தலூர் (நீலகிரி ) தலா 12, சங்கரன்கோவில் (தென்காசி), செட்டிகுளம் (பெரம்பலூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) தலா 11, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சூலூர் (கோயம்புத்தூர்), உதகமண்டலம்  (நீலகிரி ) தலா 10, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), நீடாமங்கலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), கயத்தாறு (தூத்துக்குடி), பவானிசாகர் (ஈரோடு), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சூரங்குடி (தூத்துக்குடி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), கொடநாடு (நீலகிரி) தலா 9, வால்பாறை (கோவை), பல்லடம் (திருப்பூர்), அவலாஞ்சி (நீலகிரி), சாத்தூர் (விருதுநகர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பூதலூர் (தஞ்சாவூர்) தலா 8,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
வங்க கடல் பகுதிகள் 18.11.2021: தென்மேற்கு வங்க கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 19.11.2021: தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios