விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருக்கிற நா.புகழேந்தி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். நா.புகழேந்திக்கும் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயச்சந்திரனுக்கும் போட்டி நிலவியது. இந்நிலையில் இந்த போட்டியை அறிந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இருவரையும் அழைத்து பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து ஜெயச்சந்திரனை சமாதானப்படுத்தியதை அடுத்து புகழேந்தி விக்கிரவாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் திமுக  ஏற்கெனவே 2016ல் இந்தத் தொகுதியில் போட்டியிட புகழேந்தி வாய்ப்புக் கேட்டார். 66 வயதான புகழேந்தி மூன்று முறை விக்கிரவாண்டி  ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கெனவே திமுக உறுப்பினர் ராதாமணி வென்றிருந்தார். அவர் மறைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.