Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தாக்கி மருத்துவர்கள் இறந்தால், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்... நாட்டுக்கு வழிகாட்டும் ஒடிசா முதல்வர்!

எந்த ஒரு மருந்தும் , தடுப்பூசியும் இல்லாத நிலையில் மக்களுக்காகப் போராடி வருகிறார்கள் மருத்துவர்கள். போர் வீரர்கள் செய்யும் வீரம் நிறைந்த சேவையைப் போலவே சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களும் செய்துவருகிறார்கள். அர்ப்பணிப்புடன் வேலை செய்துவரும் இவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.

Odisha government declared that corona affected doctors body burial with government respect
Author
Odisha, First Published Apr 22, 2020, 8:27 AM IST

கொரோனா வைரஸ் தாக்கி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்களுடைய உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.Odisha government declared that corona affected doctors body burial with government respect
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த லட்சுமி நாராயணன், சைமன் ஹெர்குலிஸ் ஆகிய இரு மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பு அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மருத்துவர் சைமன் ஹெர்குலிஸை அடக்கம் செய்ய முயன்றபோது பொதுமக்கள் நடத்திய தாக்குதல் இந்திய அளவில் பேசுபொருளாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்களுடைய உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.Odisha government declared that corona affected doctors body burial with government respect
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும். எந்த ஒரு மருந்தும் , தடுப்பூசியும் இல்லாத நிலையில் மக்களுக்காகப் போராடி வருகிறார்கள் மருத்துவர்கள். போர் வீரர்கள் செய்யும் வீரம் நிறைந்த சேவையைப் போலவே சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களும் செய்துவருகிறார்கள். அர்ப்பணிப்புடன் வேலை செய்துவரும் இவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும். Odisha government declared that corona affected doctors body burial with government respect
இதேபோல கொரோனா வைரஸ் தடுப்புப் பணியின்போது அரசு ஊழியர்கள் இறக்க நேரிட்டால், அவர் ஓய்வு பெறும் தேதி வரை வழங்கப்படும் ஊதியம் அவர்களுடைய குடும்பங்களுக்கு வழங்கப்படும். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் வேலைக்கு யாராவது இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டாலோ, அந்த நபர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும்” என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios