அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மனசாட்சியோடு சொல்லிருக்க மாட்டார் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு, நீட் தேர்வு போன்றவற்றைக் கண்டித்து சென்னையில் வரும் 10 வரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், டெங்கு  காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதே போல நீட் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பதக செயல்படவில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழக அரசு என்றாலே ஊழல் அரசு என மக்கள் கருதுவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார். இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.

அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனசாட்சியோடு சொல்லியிருக்க மாட்டார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள செங்குளம் கண்மாயை தூர்வாரும் பணியை வருவாய் த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெறுகின்ற ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி என்பதை ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது என்றார். மேலும், மனசாட்சி இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தட்டும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.